இன்னும் ஓரிரு வாரங்களில் புத்தாண்டில் நுழையவுள்ளோம். இந்த புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் 5 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதுவும் சனி மற்றும் குரு பகவானைத் தவிர, சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன.
இப்படி 5 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. இதன் விளைவாக பொருள் வசதிகள் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
2026 புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் முதலில் ஜனவரி 15 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மகர ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் ஜனவரி 13 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசிக்கும், ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய் மகர ராசிக்கும், ஜனவரி 17 ஆம் தேதி புதன் மகர ராசிக்கும், ஜனவரி 18 ஆம் தேதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் மகர ராசிக்கும் செல்லவுள்ளார்.
இப்படி 5 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இப்போது 2026 ஜனவரியில் நடைபெறும் கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
2026 ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் நிலை வலுபெறும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுபெறும். வருமானம் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
2026 ஜனவரியில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் மகர ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சவால்கள் குறையும். அதிர்ஷ்ட கதவு திறக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்களுகு அற்புதமாக இருக்கும். புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பரம்பரை தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்
2026 ஜனவரியில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் துலாம் ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
Tags:
Rasi Palan
