வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து..!!!


வடமாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி திணைக்களம் கூறியதை அடுத்து , நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீளப்பெறப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் 2026 முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது, இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த அனைத்து ஆசிரியர்களின் இடமாற்றங்களையும் மீறப்பெறுவதாக கல்வி திணைக்களம் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி மன்றுக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த வழக்கு முடிவுறுத்தப்பட்டது.
Previous Post Next Post


Put your ad code here