ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிரகங்களின் நிலைகளால் பல்வேறு மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. முக்கியமாக நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமான நீதிமான் சனி பகவான், இந்த ஆண்டு முழுவதும் குரு பகவானின் மீன ராசியில் இருப்பார். இதனால் இந்த ஆண்டு சனி பகவான் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது நிலைகளின் மூலமோ பல யோகங்களை உருவாக்குவார்.
அந்த வகையில் 2026 புத்தாண்டின் தொடக்கத்தில் சனி பகவான் சூரியனுடன் சேர்ந்து பஞ்சாங்க யோகத்தை உருவாக்கவுள்ளார். புத்தாண்டின் தொக்கத்தில் சூரியன் தனுசு ராசியில் இருப்பார். இந்நிலையில் ஜனவரி 04 ஆம் தேதி சனியும், சூரியனும் ஒருவருகொருவர் 72 டிகிரியில் இருந்து பஞ்சாங்க யோகத்தை உருவாக்கவுள்ளனர்.
இவ்விரு கிரகங்களும் பகை உணர்வை கொண்டிருந்தாலும் தந்தை மகன் உறவையும் கொண்டிருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இதன் விளைவாக வாழ்வில் பல நல்ல மாற்றங்களைக் காணவுள்ளனர். இப்போது சனி சூரியனால் உருவாகும் பஞ்சாங்க யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சனி சூரியனால் உருவாகும் பஞ்சாங்க யோகத்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்கள் சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள். உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். உங்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், இனிமையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் உறவு வலுபெறும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சனி சூரியனால் உருவாகும் பஞ்சாங்க யோகத்தால் பல வழிகளில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இந்த யோகத்தால் சில பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ஆனால் இந்த பயணம் நல்ல அனுபவங்கள், புதிய வாய்ப்புக்களைத் தரும். தொழிலில் சில சவால்களை சந்திக்கலாம். ஆனால் இந்த சூழ்நிலைகளை சிறந்த திட்டங்களை தீட்டி எதிர்காலர்த்தில் சிறப்பான பலன்களைப் பெற உதவும். விடாமுயற்சியால் உங்கள் இலக்கை அடைவீர்கள். எதிர்பாராத வழிகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். வாழழ்க்கைத் துணையுடன் மனம் திறந்து பேசுவீர்கள். இது உங்கள் உறவில் இனிமையை கொண்டு வரும் மற்றும் உங்கள் உறவை வலுப்படுத்தும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் புத்தாண்டில் தொடக்கத்தில் உருவாகும் பஞ்சாங்க யோகத்தால் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பல சாதனைகளைப் புரிவீர்கள். நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டைப் பெறுடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். போட்டியாளர்களுக்கு நல்ல போட்டியைத் தருவீர்கள். வருமானத்திலும் நல்ல உயர்வு ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.
Tags:
Rasi Palan
