அதிதீவிர வானிலையால், யாழ்ப்பாண மாவட்டம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து 36 கோடி ரூபாய் நிவாரண நிதியை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளமை, வெட்கி தலைகுனிய வேண்டிய விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கே, குறித்த நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில், அதிக பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள மலையக மக்களுக்கு அந்த நிதியை பகிர்ந்தளிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார்.