வெள்ளத்தில் சிக்கிய சிசுவை மீட்ட இந்திய மீட்பு குழு; குவியும் பாராட்டு..!!!


டித்வா
புயல் இலங்கையில் மோசமான பேரழிவை ஏற்படு்த்தி சென்றுள்ள நிலையில் , வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்ததுடன் , நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் இலங்கைக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எப்) .

வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஆயிரக்கணக்கானோரை இந்திய படை மீட்ட நிலையில், MyGovIndia இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “தைரியமான கரங்களில் நம்பிக்கை! இலங்கையில் வெள்ள நிவாரண நடவடிக்கையின்போது வீட்டில் தண்ணீரில் தத்தளித்த பச்சிளங் குழந்தையை இந்திய என்டிஆர்எப் வீரர் ஒருவர் கையில் ஏந்தி பத்திரமாக மீட்டு காப்பாற்றினார்.

நெருக்கடி நிலையின்போது, இந்தியாவின் தூய மனித நேயம், தைரியம், இரக்கத்தை படம்பிடித்து காட்டும் ஒரு உன்னத தருணம் இது" என்று பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள், இந்திய மீட்பு பணி குழுவினருக்கு பாராட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதேவேளை நாடுவிட்டு நாடு வந்து, சேற்றிலும் வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து போராடி வரும் இந்திய மீட்பு வீரர்களும், மீட்பு நாய்களும் இன்று இலங்கை மக்களின் மனதில் ஆழ்ந்த மரியாதையை பெற்றுள்ளனர்.

வாழ்வும் மரணமும் நடுவே சிக்கிய அப்பாவி மக்களை கண்டுபிடித்து மீட்க, இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் (NDRF) மற்றும் K9 மீட்பு பிராணிகள், 24 மணி நேரமும் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர்.

இந்த வீரர்களின் தன்னலமற்ற சேவை, இலங்கை – இந்திய நட்புறவின் உண்மையான அர்த்தத்தை உலகிற்கு உணர்த்துவதாக உணர்ச்சிப்பூர்வமாக இந்திய வீரர்களுக்கு இலங்கை மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Previous Post Next Post


Put your ad code here