வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் கிரகங்களில் புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக வேகமாக ராசியை மாற்றக்கூடியவர்.
குறுகிய நாட்களில் புதனின் நிலையில் மாற்றம் ஏற்படுவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் புதன் டிசம்பர் 06 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் ராசிக்குள் புதன் சுமார் 12 மாதங்களுக்கு பின் நுழையவுள்ளார்.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், வருமானத்தில் நல்ல உயர்வும் ஏற்படவுள்ளது. இப்போது விருச்சிக ராசிக்கு செல்லும் புதனால் நிதி ரீதியாக அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவிருக்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சமுகத்தில் பிரபலமாவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணியிட சூழல் சாதகமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். புத்திசாலித்தனத்தால் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவிருக்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலில் நல்ல உயர்வை காணும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த பயணங்களால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சியையும் தரும்.
Tags:
Rasi Palan
