யாழில் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த – உயர்தர மாணவர்களுக்கு புலமைப் பரிசில்..!!!


யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா ரூபா 20,000 வீதம் புலமைப் பரிசில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் பின்வரும் தகைமையுடைய விண்ணப்பதாரிகள் தமக்குரிய கமநல சேவைகள் நிலையத்தில் விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, பெற்றோர் அங்கத்தவராகவுள்ள கமக்கார அமைப்பு, தங்களது பிரிவிற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மற்றும் தாம் கல்வி கற்கும் பாடசாலை அதிபர் என்பவர்களது சிபாரிசுடன் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை உரிய கமநல சேவைகள் நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் 2025.12.31 திகதிக்கு முன்பு கிடைக்கக்கூடியவாறு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கையளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மேற்படி திட்டத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் விண்ணப்பதாரியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுபேறு, குடும்பவருமானம், மீள்குடியமர்வு என்பன கருத்தில் எடுக்கப்பட்டு கமநல சேவைகள் நிலைய பிரிவு மட்டத்தில் தெரிவு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகைமைகள்

ஜீவனோபாயமாக விவசாயத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், பெற்றோரில் ஒருவராவது யாழ். மாவட்டத்திலுள்ள ஏதாவதொரு கமக்காரர் அமைப்பில் உறுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.
2024 கல்வி ஆண்டிற்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து முறையே 2027ம் ஆண்டில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவராக இருத்தல் வேண்டும் என யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் பி.தெய்வநாயகி கேட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here