வடமாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் உரியமுறையில் சென்றடைவதற்கும், மோசடிகள் இடம்பெறாமல் தடுப்பதற்கும் இடர்முகாமைத்துவ குழுக்களை தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பல தரப்பினரும் உதவிகளை வழங்கத் தயாராக உள்ளனர். இருப்பினும், அனைவரும் ஒரே வகையான உதவிகளை வழங்குவது மக்களின் முழுமையான தேவையைப் பூர்த்தி செய்யாது. மாவட்டச் செயலகங்கள் ஊடாக தேவைகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சில இடைத்தரகர்கள் அல்லது குழுக்கள், உதவிகளை வழங்குவதாகக் கூறி வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் நிதியைப் பெற்றுக்கொண்டு, பெயரளவில் மட்டும் உதவி செய்வதாக முறைப்பாடு கிடைத்தள்ளது.
இவ்வாறான மோசடிகளைத் தடுக்க, நன்கொடையாளர்கள் மாவட்டச் செயலகத்தின் தேவைப் பட்டியலை பெற்றுக்கொண்டு உதவிகளை வழங்குவதே சிறந்தது. அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண நிதியத்துக்கும் புலம்பெயர் உறவுகள் நம்பிக்கையுடன் நிதியுதவி வழங்குகின்றனர்.
ஆகவே இடர்முகாமைத்துவ குழுக்கள் ஊடாக உதவிகளை வழங்கலாம் அதற்காக மாவட்டரீதியாக தொடர்பு கொள்ளகூடிய இலக்கங்களையும் ஆளுநர் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் : சுரேந்திரநாதன் – 077 4840199
கிளிநொச்சி : அஜித்தா – 077565 0671
மன்னார் : பிரதீப் – 071 990 5324
வவுனியா: கமலதாசன் – 0776138369
முல்லைத்தீவு: ரஜினிகாந்த் – 0773707720/ கோகுலராஜ் – 0773 957886
