யாழ். இந்துக் கல்லூரியின் சிவலிங்கத்தை அதேநிலையில் பேணுமாறு நீதிமன்று அறிவுறுத்து..!!!


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்துக் கல்லூரி ஞானலிங்கேச்சரர் திருக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் கடந்த ஓகஸ்ட் 28 ஆம் திகதி இரவோடு இரவாக அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருந்து. இந்தச் செயற்பாடு பல்வேறு தரப்பினரதும் கண்டனத்துக்கு உள்ளாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

சைவத்துக்கும், தமிழுக்குமாகத் தொடங்கப்பட்ட பாடசாலை என்ற வகையில் இதனை எதிர்த்து, பாடசாலையின் பண்பாட்டைப் பேணும் பொருட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் முக்கியமான இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவின் படி, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தை அந்த நிலையிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு எதிராக இடைக்கால உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால தடையுத்தரவில் சிவலிங்கத்தை வேறு எந்த இடத்துக்கும் மாற்றப்படக்கூடாது, மற்றும் அது தொடர்பான வேலைகள் செய்யப்படக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here