மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். சந்தோஷமான நாளாக இருக்கும். இந்த புத்தாண்டு உங்களுக்கு எல்லா வளமான நலனையும் கொடுக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம். நேரத்தை வீணாக்காதீர்கள். நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். நிதி நிலைமை சீராகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடம்பரம் வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருப்பது நல்லது. தேவையற்ற நண்பர்களிடம் இருந்து ஒதுங்கி இருங்கள். இந்த புத்தாண்டு உங்களுக்கு எல்லா வளமான நலத்தையும் கொடுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். உங்கள் நாள் சந்தோஷத்தோடு செல்லும். இந்த புத்தாண்டை இனிதே வரவேற்று மகிழ்ச்சியாக இந்த நாளை கடந்து செல்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். லாபம் நிறைந்த நாள். கை நிறைய பணம் சேரும் நாள்.
கடகம்
கடக ராசி காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு தேவை. சோம்பல் கூடாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வரக்கூடிய புது வருடம் உங்களுக்கு எல்லா வளமான நலனும் கிடைக்கும். இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். நண்பர்களுடன் நீண்ட நேரம் நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லவும் வாய்ப்புகள் உள்ளது. சுப செலவுகள் ஏற்படும். இந்த புத்தாண்டு உங்களுக்கு நிறைய நல்ல விஷயங்களை ஒளித்து வைத்திருக்கிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். இந்த புத்தாண்டு சந்தோஷத்தோடு பிறந்திருக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்தையும் கூடுதல் கவனம் இருக்கட்டும். அலட்சியத்தோடு ஒரு வேலையை கையில் எடுக்க வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும். மனது சலனப்படும். அடுத்தவர்களை பார்த்து சின்னதாக பொறாமை வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. மனதை கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ளுங்கள். இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு நிறைய செல்வ வளங்களை வாரி கொடுக்கப் போகிறது. எதிர்பார்ப்பு இந்த வருடம் ஏமாற்றத்தை கொடுக்காது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. செல்போன் பேசிக்கொண்டு டிரைவிங் பண்ணாதீங்க. வேலையிலும் வியாபாரத்திலும் உஷாராக இருக்கவும். செலவுகளை குறைக்கவும். வரக்கூடிய புத்தாண்டு உங்களுக்கு நல்லதை மட்டுமே கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத உதவி கிடைக்கும். சிக்கல் வரும். சமயத்தில் பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வையும் கடவுள் காண்பித்துக் கொடுப்பான். தீமையிலும் கெடுதல் நடக்கும் நாள். நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கவலைப்படாதீங்க பயப்படாதீங்க இந்த வருடம் உங்களுக்கு எல்லாம் நல்லதாகவே அமையும்.
மகரம்
மகர ராசி காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. பயணங்கள் இனிமையாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். இந்த புத்தாண்டை குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடுவீர்கள். இந்த வருடம் நீங்கள் எதிர்பார்த்த எல்லா நல்லதும் உங்களைத் தேடி வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். மனம் தெளிவாக இருக்கும். சந்தோஷமாக இந்த நாளை துவங்குவீர்கள். எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட வேண்டாம். இந்த வருடம் உங்களுக்கு எல்லா நலனையும் இறைவன் கொட்டிக் கொடுக்கப் போகின்றான்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். மனக்கசப்பு நீங்கும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சங்கடங்கள் சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமுகமான போக்கு நிலவும். சுப செலவுகள் ஏற்படும்.
Tags:
Rasi Palan