மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும் போது கவனமாக செயல்பட வேண்டும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. அடுத்தவர்கள் பேச்சை கண்மூடித்தனமாக கேட்க வேண்டாம். உங்களை உசுப்பி விடுபவர்கள் பக்கத்தில் போக கூட வேணாம் ஜாக்கிரதையா இருங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் எதிர்பாராத நல்லது உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்திலேயே இருக்கும். செலவுக்கு தேவையான பணம் வந்து கொண்டே இருக்கும். வரப்போகும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சுறுசுறுப்பாக தயாராகுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று நிறைய உருப்படியான விஷயங்களை செய்யப்போகிறீர்கள். நேரத்தை வீணடிக்காமல் உங்களுடைய கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். கைபேசியை அதிக நேரம் எடுக்காமல் இருந்தாலே போதும். வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் பாதி முடிந்துவிடும் உங்களுக்கும் அப்படித்தான் இன்றைக்கு. உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடு விதித்து சுய ஒழுக்கத்துடன் வாழ்வீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. நிதானம் தேவை. மனதை அலைபாய விடக்கூடாது. மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். நேரத்தை வீணடிக்காமல் இருக்க வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். கை நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கஷ்டங்களை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். சிரமப்படாமல் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க முடியாது. எவ்வளவு உழைப்பு முதலீடுக போடுகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கான நல்லது நடக்கும். சோம்பேறித்தனம் இருந்தால் இந்த நாள் கசப்பான நாளகத்தான் இருக்கும், பார்த்துக்கோங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் என்று உத்வேகத்தோடு நடந்து கொள்வீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களை பார்க்கும் போதே அடுத்தவர்களுக்கு ஆசை வந்துவிடும். வாழ்ந்தால் உங்களைப் போல வாழ வேண்டும் என்று. நாலு பேருக்கு உதாரணமாக சந்தோஷமாக இந்த நாள் இருக்கப் போகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள். புது மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு அமைதியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் இருக்கட்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வேலையில் திருப்தி இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நஷ்டம் எல்லாம் லாபமாக மாறும். வருமானம் பெருகும். கடன் சுமையிலிருந்து விடுபட்டு மன நிம்மதியை அடைவீர்கள். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் இறக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களை நம்பி வந்தவர்களை ஏமாற்ற மாட்டீர்கள். யாராவது உங்களுக்கு துரோகம் செய்திருந்தால் கூட அவர்களை மன்னித்து மறந்து உங்களோடு சேர்த்துக் கொள்வீர்கள். இந்த நாள் மனதிற்கு சுகமான நாளாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். கொஞ்ச நேரம் கூட அசந்து போய் உட்கார மாட்டீங்க. மனதிற்கு பிடித்த வேலைகளை செய்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சுப செலவுகளும் கொஞ்சம் இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பொறுப்புகள் அதிகரிக்கும் பொறுப்புகளை நீங்கள் சரியாக செய்து முடிப்பீர்கள். நேரத்திற்கு சாப்பாடு நேரத்திற்கு தூக்கம் என்பதை மறந்து விடாதீர்கள். அனாவசியமா கைபேசி பார்ப்பதை குறைத்தால் மேலும் நன்மைகளை பெறலாம்.
Tags:
Rasi Palan