மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நல்ல வேலை கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். நிதிநிலைமை மேலோங்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். வாரா கடன் வசூல் ஆகும். நீண்ட நாள் பிரச்சனைகள் விலகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். அலட்சியம் இருக்கக் கூடாது. நேரத்தை வீணடிக்க கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு தேவை. சொந்த பந்தங்களோடு பேசும்போது நிதானம் தேவை. இறைவழிபாடு செய்யுங்கள். பொறுமையாக இருந்தால் இந்த நாளை சுலபமாக கடக்கலாம்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நேரத்திற்கு உங்களுடைய வேலைகளை முடித்து விட்டு ஓய்வும் எடுத்துக் கொள்வீர்கள். சங்கடங்கள் விலகும் நாள். இறை நம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று காதல் கைகூடும் நாளாக இருக்கும். அன்பு வெளிப்படும். குடும்ப சண்டைகள் சரியாகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் பண்டிகையை கொண்டாட சந்தோஷம் பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் மந்தமான தன்மை இருக்கும். இருந்தாலும் பெருசாக பிரச்சனைகள் இல்லை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சின்ன சின்ன தடைகள் தடங்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அன்றாட வேலையிலும் கவனமாக செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளை எதிர்த்துக் கொள்ளக் கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. ஒரு வேலையை கையில் எடுப்பதற்கு முன்பு பலமுறை சிந்திக்க வேண்டும். அடுத்தவர்களை நம்பி பணம் காசு கண்மூடித்தனமாக கொடுக்காதீங்க. யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீங்க. கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தொந்தரவுகள் உங்களை விட்டு விலகும். எதிரி பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். தேவையற்ற சந்தேகங்கள் உங்களை விட்டு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் முயற்சி தேவை. தெரியாத விஷயத்தில் காலை வைக்கக்கூடாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. பொங்கலுக்கு ஷாப்பிங் செல்வதாக இருந்தால் கவனமாக இருப்பது நல்லது. டிஸ்கவுண்ட் விற்பனையில் எந்த பொருளையும் வாங்காதீங்க. புதிய முதலீடுகள் செய்யும்போதும் கவனம் தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். பெருமையான நாளாக இருக்கும். தலைக்குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். கெட்ட பெயர் எடுத்த இடத்தில் நல்ல பெயர் எடுத்து கர்வமாக செயல்படுவீர்கள். கவலைப்படாதீங்க இறைவனின் அருள் உங்களுக்கு இருக்கு.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை எதிர்ப்பாராத பண வரவு, சம்பள உயர்வு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பொங்கலை கொண்டாட தேவையான பணம் கையை வந்து சேரும். குடும்ப ஒற்றுமை இரட்டிப்பாகும். குடும்பத்திற்கு தேவையான சின்ன சின்ன சந்தோஷத்தை செய்து கொடுத்து பெரிய அளவில் மனமகிழ்ச்சியை அடைவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனதிருப்தியான நாளாக இருக்கும். செய்யும் வேலையில் மன நிறைவாக இருப்பீர்கள். சந்தோஷம் வெளிப்படும். வேலையையும் வியாபாரத்தையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் கவனமாக செயல்படுவீர்கள். மனைவி குழந்தைகளோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும் நாள்.
Tags:
Rasi Palan