இன்றைய ராசிபலன் - 11.01.2026..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. மனது ஒரு நிலையாக இருக்காது. இதனால் சின்ன சின்ன பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்படுங்கள். முக்கியமான வேலையை நாளை தள்ளி வைத்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் மன திருப்தி இருக்கும். குடும்பத்துடன் பொங்கலை கொண்டாட தயாராகி விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். நிதிநிலைமை சீராக இருக்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். வேலைகளை சரிவர செய்ய முடியாது. முடிந்தவரை டென்ஷனை குறைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் பேச்சுக்கு செவி சாய்க்காதீர்கள். முக்கியமான வேலையை மட்டும் கவனமாக செய்து முடிப்பது நல்லது.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். வாரா கடன் வசூல் ஆகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இறை வழிபாடு செய்வது மனதிற்கு மேலும் அமைதியை தரும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். புது மனிதர்களின் சந்திப்பு நிறைய நல்ல அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். புதிய முதலீடுகளை வியாபாரத்தில் செய்து பெரிய அளவில் லாபத்தை அடைவீர்கள். விவசாயிகளுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குடும்ப பஞ்சாயத்துகள் ஒரு முடிவுக்கு வரும். கோர்ட்டு கேஸ் வழக்குகளுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும். நீண்ட நாள் மன கசப்பு நீங்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். டென்ஷன் குறையும். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நிதிநிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்பப் பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் வரும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சோம்பேறித்தனம் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்ப ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி பிரச்சினை சரியாகும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செய்வீர்கள். பொங்கலுக்கு குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று மாலை உடல் சோர்வு இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. முன் கோபம் வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்றாலும் வேலையிலும் வியாபாரத்திலும் பிரச்சனை, வீடு தேடி வர வாய்ப்புகள் உள்ளது. நிதானமாக செயல்படுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அதிகம் பேசாதீர்கள்.
Previous Post Next Post


Put your ad code here