யாழில். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கும்பல் - இருவர் கைது ; நான்கு வாகனங்கள் மீட்பு..!!!


யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களின் நான்கு வாகனங்கள் மணல் அகழ்வுக்கு பயன்படுத்திய சவல் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தனங்கிளப்பு பகுதியில் கும்பல் ஒன்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.

பொலிசாரை கண்டதும் , மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பியோடினர் , அவர்களில் இருவரை பொலிஸார் மடக்கி பிடித்தனர்.

அத்துடன் மணல் ஏற்றிய நிலையில் காணப்பட்ட இரண்டு டிப்பர் வாகனங்கள் , இரண்டு உழவு இயந்திரங்கள் , மற்றும் மண் அகழ்வுக்கு பயன்படுத்திய சவல் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தப்பியோடிய ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துளள்னர்.
Previous Post Next Post


Put your ad code here