12 ஆண்டுகள் கழித்து உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..!!!


ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் மிகவும் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த கிரகங்களில் ஒருவராக கருதப்படுகிறார். கிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் வரை இருப்பார். தற்போது குரு பகவான் மிகவும் வேகமாக நகர்கிறார். அதுவும் 2026 ஆம் ஆண்டில் குரு பகவான் 3 முறை ராசியை மாற்றவுள்ளார். அதில் தற்போது மிதுன ராசியில் குரு பகவான் உள்ளார்.

இந்த மிதுன ராசியில் ஜூன் 02 ஆம் தேதி வரை இருப்பார். இக்காலத்தில் குரு பகவான் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார். அதில் பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் புதனுடன் சேர்த்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இப்படி உருவாக்கும் யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சிலருக்கு மோசமாக இருக்கும்.

வேத நாட்காட்டியின் படி, பிப்ரவரி 17 ம் தேதி குரு பகவானும், புதனும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த யோகத்தின் போது குரு பகவான் மிதுன ராசியிலும், புதன் கும்ப ராசியிலும் இருப்பார்கள். இந்த ராஜயோகத்தினால் 3 ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மீனம்

நவபஞ்சம ராஜயோகத்தால் மீன ராசிக்காரர்களின் வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வீடு வாங்கும் கனவு நனவாகும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். கையில் செல்வம் குவியும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் வணிகம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்

நவபஞ்சம ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆராய்ச்சி, வங்கி, கல்வி ஆகிய துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

கும்பம்

நவபஞ்சம ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் பல வழிகளில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கனவுகள் நனவாகும். தொழிலில் திடீர் லாபங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
Previous Post Next Post


Put your ad code here