செல்வச்சந்நிதி கோயில் மடத்தில் ஆணின் சடலம்..!!!



தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் உள்ள மடத்தில் தங்கியிருந்து யாசகம் செய்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

மட்டக்களப்பு பெரிய போரதீவைச் சேர்ந்த 60 வயதுடைய அவர் சடலமாக காணப்படுவதாக வல்வெட்டித்துறைப் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் ஒப்படைக்குமாறு வல்வெட்டித்துறை பொலிசாருக்கு உத்தரவிட்டு உறவினரின் வருகைக்காக மேல் விசாரணையை ஒத்திவைத்தார்.
Previous Post Next Post


Put your ad code here