இன்றைய ராசிபலன் - 13.01.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புது வாய்ப்புகளை கை நழுவ விடாதீர்கள். எதுவாக இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்பது நல்லது. இது எனக்கு தெரியாது. இது எனக்கு வராது என்ற வார்த்தையை இன்று பயன்படுத்த வேண்டாம். இறைவனின் ஆசீர்வாதத்தால் நல்லது நடக்கும் நாள் இன்று.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பக்குவம் வெளிப்படும் நாளாக இருக்கும். உங்களுடைய திறமையால் நிறைய நல்ல விஷயங்களை செய்து முடிப்பீர்கள். இன்று வாழ்க்கையில் ஏற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை மேலோங்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து சந்தோஷத்தை பெறுவீர்கள்.


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நேர்மையான நாளாக இருக்கும். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்க மாட்டீர்கள். கஷ்ட நஷ்டங்களை எதிர்கொண்டு போராடி வாழ்வதற்கு நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள் இன்று. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். பண்டிகையை கொண்டாட தேவையான பணம் கையை வந்து சேரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நிதிநிலைமை மேலோங்கும். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். நீண்ட நாள் மனபாரம் சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கவும் சில பேருக்கு வாய்ப்புகள் உள்ளது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். குறித்த நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய கடமைகளை செய்து முடித்து விடுவீர்கள். நிறைய நேரம் ஓய்வு கிடைப்பது போல இருக்கும். மனதிற்கு பிடித்த நபரோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.


துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் எல்லாம் நல்லபடியாக நடக்கும். இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் இருக்கும். கவலை வேண்டாம். நடக்கும் நல்லதை அனுபவிப்பதற்கு உண்டான வழியை பாருங்கள். கவலைகளை இன்று ஒதுக்கி வைத்து விடுங்கள். அதையெல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் டென்ஷன் இருக்கும். எந்த முடிவை எடுப்பது சரி, என்று தெரியாமல் பதட்டமான சூழ்நிலை உண்டாகும். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். நம்பிக்கையான நபருடன் மட்டும் உதவி பெறுங்கள்.‌

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கடன் சுமை குறையும். வீட்டில் இருப்பவர்களுக்கு பண்டிகைக்கு தேவையான பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று கவனமாக செயல்பட வேண்டும். யாராவது உங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. ஆசை வார்த்தைகள் பேசி மயக்கினாலும் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். நல்லது எது கெட்டது எது என்று ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. சுப காரிய விஷயங்களை நாளை தள்ளி போடுங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் தெளிவாக இருப்பீர்கள். உங்களுக்கு என்ன தேவை என்ன தேவையில்லை என்பதை சரியாக முடிவு செய்வீர்கள். கெட்ட விஷயங்கள் உங்களை விட்டு விலகி செல்லும். நல்ல விஷயங்களை உங்களுடன் வைத்துக் கொள்வீர்கள். இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக இருக்கும். பண்டிகையை கொண்ட தயாராகிடுவீங்க நல்லது நடக்கும் நாள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று அற்புதமான நாளாக இருக்கப் போகிறது. பாசம் வெளிப்படும், காதல் வெளிப்படும், சுப காரிய நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடந்து முடியும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை இன்று நீங்கள் அனுபவிப்பீர்கள். ஆனால் வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளோடு சண்டை போட வேண்டாம்.
Previous Post Next Post


Put your ad code here