மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்கள் மன நிம்மதி பெறுவீர்கள். பொங்கலை வரவேற்க குடும்பத்தோடு தயாராகி விடுவீர்கள். வேலை வியாபாரம் என்று சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த நாள் மன நிறைவாக இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். வீட்டில் வேலை எல்லாம் படு சுறுசுறுப்பாக நடக்கும். உங்களை கொண்டாட உற்றார் உறவினர் என்று அனைவரும் தயாராக தொடங்கி விடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் கலை கட்டும். அலுவலக வேலை கொஞ்சம் மந்தமாக இருக்கும். வியாபாரம் சுறுசுறுப்போடு நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் உங்கள் கையை வந்து சேரும். இந்த பண்டிகையை சந்தோஷமாகக் கொண்டாட தயாராகி விடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று சின்ன மன வருத்தம், சோகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவலைப்படாதீங்க கடவுளின் மீது பாரத்தை போட்டு நல்ல விஷயங்களை செய்யுங்கள். துன்பத்தை கொடுத்த கடவுள் அதை இந்த நாள் இறுதியில் விளக்கியும் வைப்பான். கவலை படாதீங்க எல்லாம் நல்லபடியாக நடக்கும் பொறுமையாக இருங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் மனதிருப்தி இருக்கும். நிதிநிலைமை சீராகும். உங்களுக்கு தேவையான வேலைகள் வீட்டில் சுறுசுறுப்போடு நடக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மன நிம்மதி கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமை தேவை. நிதானம் தேவை. அடக்கம் தேவை. அனாவசியமாக முன்கோபடக்கூடாது. தேவையில்லாத இடத்தில் பேசக்கூடாது. கவனமாக செயல்படுங்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கையில் எடுத்த வேலை ஒரு முயற்சியிலேயே வெற்றியை கொடுக்காது. அயராது உழைத்தால் மட்டுமே இன்று வெற்றி காண முடியும். சோம்பேறித்தனம் கூடாது. அடுத்தவர்களை புறம் பேசக்கூடாது கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு நேரம் போவதே தெரியாது. வேலையிலும் வியாபாரத்திலும் அவ்வப்போது சின்ன ஏற்ற இறக்கங்கள் வந்தாலும், பெருசாக பாதிப்புகள் இல்லை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாக நிறைந்த நாளாக இருக்கும். வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாட வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தயாராகுவீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுக போக வாழ்க்கைதான். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம், நல்ல கவனிப்பு என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். நண்பர்களோடு நேரத்தை அதிகம் செலவு செய்வீர்கள். பழைய கதைகளை பேசுவதற்கான ஒரு வாய்ப்பு இன்று கிடைக்கும். மன நிம்மதி இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறவுகளுடன் நேரத்தை செலவு செய்ய முடியாது. இந்த நாள் கொஞ்சம் பிசியான நாளாக இருந்தாலும், இந்த நாள் இறுதியில் பண்டிகையை கொண்டாட நீங்களும் இணைந்து விடுவீர்கள். சிரமங்களை எதிர்பார்க்காமல் சுறுசுறுப்பாக எல்லா வேலைகளையும் முதலிலேயே முடிச்சிடுங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிரமங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சிரமங்களை பொருட்படுத்தாமல் முயற்சி செய்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். பிரச்சனைகளை கண்டு துவண்டு போகாதீங்க. எதிர்த்து போராடுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.
Tags:
Rasi Palan