யாழில். வாகன விபத்து - வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பில் தகவல் இல்லை..!!!


யாழ்ப்பாணத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த பஸ் நிலையத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் தெரியாத நிலையில் விபத்துக்குள்ளான வாகனத்தை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக பயணித்த குறித்த வாகனம் நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அண்மித்த சந்தி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிலைய கட்டடத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

குறித்த வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவத்திடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , விபத்துக்கு உள்ளான வாகனத்தினையும் மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்.

வாகனம் தொடர்பிலும் வாகனத்தில் பயணம் செய்தவர்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here