ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார்.
அதே வேளையில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இவ்விரு கிரகங்களும் பிப்ரவரி மாதத்தில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். அதுவும் சனி பகவானின் கும்ப ராசியில் இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேர்ந்து பயணிக்கவுள்ளார்கள்.
இதன் விளைவு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், நல்ல நிதி நன்மைகளையும் பெறவுள்ளனர். இப்போது பிப்ரவரி மாதத்தில் ஒன்றிணையும் செவ்வாய் சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். நீண்ட காலமாக கஷ்டப்பட்டு செய்த வேலைக்கான பலன் கிடைக்கும். நிலுவையில் இருக்கும் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் நல்ல உயர்வு ஏற்படும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மேலும் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். வணிகர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, உறவுகள் வலுவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தன்னம்பிக்கையில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் சிக்கலின்றி சீக்கிரம் முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் மற்றும் மருத்துவ துறையுடன் தொடர்புடைய வேலை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தாயுடனான உறவு வலுவாக இருக்கும். எந்த வேலை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
Tags:
Rasi Palan
