பொங்கல் நாளில் நடக்கும் 2026-ன் முதல் சூரியன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகுது..!!!


பொங்கல் பண்டிகையானது ஜோதிடத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் பொங்கல் பண்டிகையின் முதல் நாளில் தான் சூரியன் தனுசு ராசியில் இருந்து வெளியேறி, மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான். சூரியனும், சனி பகவானும் தந்தை மகன் உறவைக் கொண்டவர்கள்.

முக்கியமாக சூரியன் சுமார் 1 வருடத்திற்கு பின் தனது மகனின் மகர ராசிக்கு செல்வதால், இந்த சூரிய பெயர்ச்சி சற்று சிறப்பானது. அதோடு இந்த பெயர்ச்சியானது 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய பெயர்ச்சியும் கூட. தற்போது சனி பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார்.

சூரியன் இப்படி சனி பகவானின் ராசிக்கு செல்வதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் அதிர்ஷ்டசாலிகளாக திகழ்வார்கள். இப்போது 2026 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையின் போது நடக்கும் சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலை செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் கடுமையான போட்டியை வழங்கலாம். இருப்பினும் வெற்றி உங்களுக்கே கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்றோர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் சாதகமான பலன்களைத் தரும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வரும். நிதி நிலைமை மேம்படும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

மகர ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பல வழிகளில் இருந்து நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும்.
Previous Post Next Post


Put your ad code here