மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். உங்கள் கோபத்தை மூன்றாவது நபரிடம் வெளிக்காட்ட மாட்டீர்கள். எது நல்லது, எது கெட்டது என்பதை நன்றாக உணர்ந்து செயல்படுவீர்கள். இத்தனை நாள் இல்லாத மன நிம்மதி உங்களை தேடி வரும். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். ஏதாவது ஒரு வகையில் இன்று பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து உங்களை தேடி வரும். சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். இந்த நல்ல வாய்ப்பை கை நழுவ விடாதீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் பெரிய அளவில் நல்லது நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஆதாயம் கிடைக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பெரிய அளவில் நல்ல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பெரிய அளவில் உங்களிடம் இருந்த சிக்கல்கள் தானாக, உங்களை விட்டு விலகும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். கடன் சுமை குறையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் சரியாக நடக்கும். வரவேண்டிய பணம் கையை வந்து சேரும். கிடைக்க வேண்டிய பெயர் புகழ் அந்தஸ்து கிடைக்கும். கடவுள் உங்களுக்கு இன்று எந்த குறையையும் வைக்க மாட்டார். நீங்கள் நேரத்தை மட்டும் வீணடிக்காமல் இருப்பது உங்கள் கையில் தான் உள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களிடமிருந்த சோம்பேறித்தனம் விலகி சுறுசுறுப்பு வெளிப்படும் நாள் இன்று. நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நல்லது நடக்கும். அடுத்தவர்களுடைய உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிக்கல்களில் இருந்து விடுபட்டு மன நிம்மதியை அடைவீர்கள். செய்த தவறுக்கு மனம் வருந்தக்கூடிய நாள் இன்று.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் உங்களுடைய கடமைகளிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். பெரியவர்களின் ஆசியால் மனநிறைவு கிடைக்கும் நாள் இன்று.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களை பொருத்தவரை இன்று மன அமைதி இருக்கும். நிம்மதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கே நிலவும். நல்ல நண்பர்களின் அறிமுகம் மனதிற்கு நிம்மதியை தரும். காதல் கைகூடும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது கிடைக்கும். மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபரோடு நீண்ட நேரம் செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் இனிதே அமையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். மதிப்பு மரியாதையும் கூடும். யாரெல்லாம் உங்களை ஏளனமாக பேசினார்களோ, அவர்கள் வாயால் உங்களை நிச்சயம் இன்று வாழ்த்துவார்கள். உங்களுக்கு இருந்த அவப்பெயர் விலகும் மனது நிம்மதி அடையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுப நிகழ்ச்சிகளை துவங்கலாம். சுப காரிய தடை விலகும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் சந்தோஷம் இருக்கும். விருந்தாளிகளின் வருகையால் இன்று நேரம் போவதே தெரியாது. மற்றபடி வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் தேவை. கடமையிலிருந்து தவறாமல் நடப்பது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எந்தெந்த வேலையெல்லாம் நீண்ட நாள் செய்யாமல் அப்படியே இருக்கிறதோ, அந்தந்த வேலைகளை எல்லாம் இன்று கையில் எடுப்பீர்கள். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் கஷ்டங்கள் மனபாரம் உங்களை விட்டு விலகிவிடும். இந்த நாள் இனிய நாளாகவே அமையும்.
Tags:
Rasi Palan