மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் பிறந்த 5 ஆண் குழந்தைகள்..!!!


மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் தாயொருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு, கிரான் குளத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் பிரசவத்திற்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை (26) அவருக்கு பிரசவம் நடைபெற்றது. இதன்போது அந்தத் தாய் ஐந்து ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

தற்போது தாயும், ஐந்து குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
Previous Post Next Post


Put your ad code here