மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையையும் வியாபாரத்தையும் சரியாக கவனிக்க, உங்களுக்கான நேரம் போதாது. நேரத்தை வீணடிக்காதீங்க. கவனமாக இருங்க. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியான நாளாக இருக்கும். வேலையும் வியாபாரமும் சரியாக அந்தந்த நேரத்தில் நடக்கும். பெருசாக எந்த டென்ஷனும் இருக்காது. நிதி நிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப கையில் பணம் இருக்கும். மாத கடைசி நாட்களைக் கூட சந்தோஷமாக கடந்து செல்வீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
- Advertisement -
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கையில் எடுத்த வேலைகள் அவ்வளவு சுலபத்தில் வெற்றியை கொடுக்காது. சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்காக கவலைப்பட வேண்டாம். இந்த நாள் இறுதியில் உங்கள் கடமைகளை எல்லாம் சரியாக செய்து முடித்து இருப்பீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் என்று திறமையாக செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மனதிற்கு பிடித்த நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.
- Advertisement -
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். சோம்பேறித்தனத்தை விட்டு விடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு இருப்பீர்கள். எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற்றி விட வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் உங்களை கை தூக்கி விடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு தகுந்த வாய்ப்புகள் வீட்டு கதவை தட்டும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள் இன்று. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
- Advertisement -
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு இருக்கும். உடல் நல பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடவும். வேலை வேலை என்று மட்டும் இல்லாமல், உங்களுடைய நலனிலும் அக்கறை காட்டுவது நல்லது. கொஞ்ச நேரம் குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவதும் மன நிறைவான சந்தோஷத்தை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வரா கடன் வசூல் ஆகும். உங்களுக்கும் வீட்டிற்கும் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சில பேருக்கு சொத்து வாங்குவதற்கு வாகனம் வாங்குவதற்கு கூட யோகம் இருக்கிறது. லட்சுமி கடாட்சம் நிறைந்த நாள் இன்று.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். உங்களோடு இருப்பவர்களையும் வாழ்க்கையில் முன்னேற்றி விட தேவையான உதவிகளை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு பண உதவியும் செய்வீர்கள். இன்று மனநிறையோடு தூங்க செல்வீர்கள் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். சோம்பேறித்தனம் கூடாது. எந்த ஒரு வேலையிலும் தாமதம் இருக்கக் கூடாது. வீண் அலைச்சல்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. அவசியம் பயணம் செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் கவனத்தோடு செயல்பட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். கொஞ்சம் கோபம் அதிகமாக வரும். வேலையிலும் வியாபாரத்திலும் மந்தமான தன்மை நிலவும். அடுத்தவர்களை திட்டக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். உங்களை பலபேர் எதிரியாக பார்க்கக்கூடிய தருணங்கள் அமையும். கவனமாக செயல்படுங்க. கூடுமானவரை நிதானத்தோடு இருப்பது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. உங்களுடைய மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக சொல்வதற்கு முன்பு, பலமுறை சிந்தித்துப் பாருங்கள். உங்கள் பேச்சுக்கு மரியாதை இல்லாத இடத்திற்கு இன்று செல்லாமல் இருப்பதே நல்லது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அதிகம் பேசக்கூடாது.
Tags:
Rasi Palan