மணல் ஏற்றிவந்த டிப்பர் சாரதியில் தூக்கக் கலக்கத்தால் கிளிநொச்சிப் பகுதியில் கோரவிபத்து இடம்பெற்றதில் இ.போ.ச. பயணிகள் பேருந்தில் பயணித்த பயணிகள் தெய்வாதீனமாக உயிர்தப்பினர்.
கிளிநொச்சியில் ஏ-9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் முறிகண்டி பகுதியில் இருந்து மணல் ஏற்றி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றது.
டிப்பர் சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோதியதில் பேருந்தும் டிப்பர் வாகனமும் பாரிய சேதங்களுக்கு உள்ளான போதும் தெய்வாதீனமாக பயணிகள் தப்பித்தனர்.
இவ் விபத்தின் போது அரச இ.போ.ச. பேருந்தின் சாரதி, டிப்பர் சாரதி ஆகியோர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பேருந்தில் பயணித்த 02 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.