அதிகரிக்கப்போகும் மின்சார கட்டணம்: வெளியாகியுள்ள தகவல்..!!!



இந்த ஆண்டுக்கான மின்சார கட்டணங்களை திருத்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

அதன்போது, ஆண்டின் முதல் காலாண்டில் மின்சார கட்டணங்களில் 11.57% அதிகரிப்பு தேவை என்று சபை தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்ட ஆவணங்களின்படி, இந்த முன்மொழிவு ஜனவரி முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்திற்கான மின்சார கட்டணங்களை உள்ளடக்கியது.

இது வீட்டு, மத, தொழில்துறை, வணிக மற்றும் பிற நுகர்வோர் பிரிவுகளில் எரிசக்தி கட்டணங்கள் மற்றும் நிலையான மாதாந்திர கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும்.

இந்த நிலையில், குறித்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தபடுமாயின் வீட்டு மின்சார நுகர்வோர் அனைத்து நுகர்வு தொகுதிகளிலும் யூனிட் விகிதங்கள் மற்றும் நிலையான கட்டணங்கள் இரண்டிலும் அதிகரிப்பை காண்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here