மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பகை விலகும் நாளாக இருக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சங்கடங்கள் விலகி, திருப்தியான நிலை உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். முருகனின் அருளால் புதிய முயற்சிகளும் நல்ல வெற்றியைத் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அமைதியான நாளாக இருக்கும். கோபதாபங்களில் இருந்து விடுபடுவீர்கள். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளோடு இன்று நேரத்தை செலவு செய்வீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அளவில்லா மகிழ்ச்சி இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நோய் நொடி தொந்தரவுகள் குறையும். வீண் விரைய செலவிலிருந்து விடுபடுவீர்கள். சேமிப்பை உயர்த்துவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். இன்று புதிய சேமிப்புகளை துவங்கலாம். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழலாம். வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு செயல்படுங்கள். நேரத்தை அனாவசியமாக வீணடிக்க வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன வருத்தம் இருக்கும். பழைய சிந்தனைகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது. இதனால் சின்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை வரலாம். மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். பழைய விஷயங்களை பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களைப் பார்ப்பவர்களுக்கு, ஆசையாக இருக்கும். உங்களைப் போல வாழ வேண்டும் என்று. உங்களுடைய தோற்றமும் வசீகர பேச்சும் அனைவரையும் கவரும்படி அமையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உழைப்பு உழைப்பு என்று இருப்பீர்கள். கடினமான உங்கள் உழைப்பு பெரிய அளவில் வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும். முன்னேற்றம் நிறைந்த நாள் இன்று. வாழ்க்கையில் பின்தங்கிய நிலையில் இருந்தவர்கள், இன்று மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்று முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சந்தோஷத்தை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்வீர்கள். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். காதலை வெளிப்படுத்துங்கள். நல்லதே நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இக்கட்டான சூழ்நிலையில் மனம் தளர்ந்து விடக்கூடாது. இறைவனின் மீது நம்பிக்கையை வையுங்கள். விடா முயற்சி செய்யுங்கள். நிச்சயம் விஸ்வரூப வெற்றி கிடைக்கும். புது மனிதர்களோடு பழகும் போது கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பெயர் புகழ் பாராட்டு உயரும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நம்பர் ஒன் இடம் கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி செய்த காரியங்கள் வெற்றி அடையும். இறை வழிபாட்டின் மூலம் மனதிற்கு அமைதி கிடைக்கும். முருகனின் அருளால் இன்று எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கை நிறைய மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும். ஏதோ ஒரு வகையில் பணம் உங்கள் கையை வந்து சேரும். சொத்து சுகம் வாங்கும் வாய்ப்புகளும் இருக்கிறது. பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை சுபசெலவை ஏற்படுத்தும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிக்கல்களில் இருந்து விடுபட திறமையாக சிந்திப்பீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். உங்களுடைய பேச்சாற்றல் வெளிப்படும் நாள். புது வாய்ப்புகள் வீடு தேடி வரும். மன நிறைவான சூழலையை உணருவீர்கள்.