மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். இந்த நாளை உபயோகம் உள்ள நாளாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். உங்களுடைய பின்தங்கிய நிலையை, நீங்களே முன்னேற்றத்திற்கு கொண்டு வந்து விடுவீர்கள். நல்லது நடக்கும் நாள் இன்று.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஈடுபாடு காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் கைநிறைய லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். வியாபாரத்தில் இதுநாள் வரை இருந்த நஷ்டம் கூட லாபகரமாக மாறும். மகாலட்சுமி கடாட்சம் நிலவும். எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மை தரக்கூடிய விஷயங்கள் இன்று நடக்கும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் அசதியாக இருப்பீங்க. வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். எளிதில் ஜீரணம் தராத பொருட்களை இன்று சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கவனமாக செயல்பட வேண்டும். கவனக்குறைவு இருக்கக் கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிடாதீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். உங்களுடைய சொந்த பிரச்சனையை வெளியில் சொல்ல வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் வெற்றியைக் கொடுக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன பிரச்சனைகளில் சிக்க வாய்ப்பு உள்ளது. சிக்கல்களை சரி செய்ய தக்க சமயத்தில் உதவிகளும் கிடைக்கும். உறவுகள் நண்பர்கள் என்று அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக நிற்பார்கள். நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள் இன்று வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்பும் மதிப்பும் மரியாதையும் உயரப் போகிறது. வாழ்க்கைத் துணை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை தேடி காத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. முக்கியமான வேலைகளை ஒரு மணி நேரத்திற்கு முன்கூட்டியே செய்து முடிப்பது நல்லது. கடைசி நிமிடம் வரை ஒரு வேலையை எடுத்துச் செல்ல வேண்டாம். கைபேசி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். நேரத்தை வீணாக்காதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று ஆதரவு நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய பேச்சுக்கு நாலு பேர் மரியாதை கொடுப்பார்கள். உங்களுடைய பேச்சுத்திறமை வெளிப்படும். உங்களுடைய தோற்றம் அழகு பெறும். வசீகரத்தன்மையோடு இன்று நடந்து கொள்வீர்கள். புதுசா இன்டர்வியூக்கு போறீங்க, அல்லது மீட்டிங் அட்டென்ட் பண்ண போறீங்க அப்படின்னா, உங்களுக்கு நம்பர் ஒன் இடம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் சிக்கல்கள் நிறைந்த நாள் தான். கவனத்தோடு செயல்பட வேண்டும். மூன்றாவது நபரிடம் பேசும்போது கவனம் இருக்கட்டும். உங்களுடைய சொந்த விஷயங்களை யாரிடமும் அனாவசியமாக பகிர வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். காதல் வெளிப்படும் அன்பு நிறைந்த இந்த நாளில், புது உறவுகள் கிடைப்பதற்கு நிறைவே வாய்ப்புகள் இருக்கிறது. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதுவரை இல்லாத ஒரு நல்ல புது அனுபவத்தை இந்த நாள் உங்களுக்கு கொடுக்கும்.
Tags:
Rasi Palan