11 ஆண்டுகளுக்குப் பின் அரிய நிகழ்வு ; 2026 பெப்ரவரி மாதம் இப்படி ஒரு சிறப்பா..!!!


நடப்பாண்டில் நான்கு வாரங்களை கொண்ட இந்த பெப்ரவரி மாதம் ஒரு தனித்துவமான மாதமாகும். அதாவது ஞாயிற்றுக்கிழமை தொடங்கி சனிக்கிழமையுடன் முடிவடையும் நான்கு வாரங்களை (28 நாட்கள்) கொண்ட இந்த மாதம் ஒரு "முழுமையான மாதம்" என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இத்தகைய தனித்துவமான பெப்ரவரி மாதம் 2015 ஆம் ஆண்டில் அமைந்ததுடன் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இந்த அரிய நிகழ்வு, மீண்டும் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் 2037 ஆம் ஆண்டில் நிகழும். இந்த மாதம் நாட்காட்டியில் மிகவும் நேர்த்தியாகக் காணப்படுவதால், பலரும் இதனை "செவ்வக மாதம்" என்றும் அழைக்கின்றனர்.

இந்த பெப்ரவரி மாதத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் (திங்கள் முதல் ஞாயிறு வரை) சரியாக நான்கு முறை வருவது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here