இன்றைய ராசிபலன் - 16.02.2026..!!!





மேஷம்


மேஷ ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வருமானம் பெருகும். மன நிம்மதி இருக்கும். இரவு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். கை நிறைய பணம் வைத்திருப்பீர்கள். என்ன செய்வது என்று தெரியாமல் பணத்தை அனாவசியமாக செலவு செய்யக்கூடாது. எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்புகளை மேற்கொள்ளலாம். அனுபவ சாலிகளின் பேச்சை கேட்கலாம். கூடா நட்பிலிருந்து விலகி இருக்கவும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று பெருமையான நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சூழ்நிலையில் நீங்கள் நிற்பீர்கள். எந்த இடத்திலும் தலைக்குனிந்து நிற்க மாட்டீர்கள். உங்கள் பக்கம் நியாயம் இருக்கும். நேர்வழியில் நடந்து கொண்ட காரணத்தால் உங்கள் கை, எல்லா இடத்திலும் ஓங்கி நிற்கும். நேர்மை இன்று உங்களை காப்பாற்றும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று கொஞ்சம் மன சஞ்சலங்கள் இருக்கும். இருந்தாலும் உங்களுடைய பக்குவம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். எந்த வேலையை எப்படி செய்தால் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம் என்று சரியாக கணக்கு போடுவீர்கள். வரக்கூடிய பிரச்சனைகளை சாதுரியமாக சமாளிப்பீர்கள். திறமை வெளிப்படும் நாள் இன்று.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அத்தனையும் வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். சில பேருக்கு இடமாற்றத்தோடு சேர்ந்த பிரமோஷனும் கிடைக்க வாய்ப்பு இருக்கு.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் எல்லாம் லாபம் கொடுக்குமோ, அந்த விஷயங்களை தேர்ந்தெடுத்து செயல்படுத்துவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரி தொல்லை நீங்கும். மனமகிழ்ச்சி நிறைந்த நாள் இன்று.



துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். வேலையிலும் வியாபாரத்திலும் அலட்சியம் வேண்டாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷார். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. புதிய முதலீடுகளை எதிலும் செய்ய வேண்டாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எல்லா வேலையும் சுலபமாக செய்து முடித்த விட வேண்டும் என்று நினைக்கக்கூடாது. கொஞ்சம் கஷ்டப்படும் போது தான் உங்களுக்கான பலன் உங்களை வந்து சேரும். இறைவழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு தேவையான விஷயங்களை, தேவையான நேரத்தில் சரியாக செய்து கொள்வீர்கள். வாக்கு தவற மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுவீர்கள். கடன் சுமை குறையும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கடின உழைப்பு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் சிரமங்கள் உண்டாகும். அலைச்சல் நிறைந்த இந்த நாளை கவனமாக கடந்து செல்ல வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுவது நல்லது. தேவையான நேரத்தில் தேவையான ஓய்வு கட்டாயம் எடுக்கணும் மறக்காதீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் எதிர்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய பேச்சுக்கு சபையில் மரியாதை இருக்காது. சபையில் நீங்கள் பேசாமல் இருப்பது இன்னும் சிறப்பு. அதிகம் பேசாதீங்க, காரியத்தில் கண்ணும் கருத்துமோடு இருப்பது நல்லது. எதிரிகள் பிரச்சினை கொஞ்சம் இருக்கும் சமாளிக்க வேண்டும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பாராட்டு கிடைக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஸ்மார்ட் வொர்க் செய்து அனைவரையும் அசத்தி விடுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனதை ஈடுபடும். மன நிம்மதி கிடைக்கும்.
Previous Post Next Post


Put your ad code here