மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. நீண்ட நாள் நீங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் இனிதே நடந்து முடியும். சொந்த பந்தங்களோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை தடைப்பட்டு வந்திருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் துவங்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் தெளிவாக சிந்திப்பீர்கள். குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு நல்லது நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனது ஈடுபடும். சிவன் வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் குடும்பத்திலும் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். நல்லது நடக்கும் நாள் இன்று. இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்ல ஓய்வு கிடைக்கும். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், பெருசாக எந்த வேலையும் செய்யாமல் உங்களுடைய நேரத்தை இன்று சந்தோஷமாக செலவு செய்யப் போகிறீர்கள். இந்த விடுமுறை நாள் உங்களுக்கு இனிமையான அனுபவங்களை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். முன்கோபம் அதிகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சிவனை வழிபாடு செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அவசரம் வேண்டாம். நிதானத்தோடு இருந்தால் இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். மற்றபடி வேலை வியாபாரத்தில் எல்லாம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபரை முழுமையாக நம்ப கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் கவனம் இருக்கட்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். மனதில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உங்கள் கை விட்டு சென்ற வாய்ப்புகள் எல்லாம் மீண்டும் உங்கள் கையை வரும். வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். மகாலட்சுமி கடாட்சம் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். புதிய சேமிப்பு துவங்கலாம். புதுசாக தங்கம் வாங்கலாம். இதுபோல நல்ல காரியங்களை இன்று நீங்கள் செய்தால் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று நிதானமாக நடந்து கொள்வீர்கள். பணிவு அடக்கம் வெளிப்படும் நாள் இன்று. யாரையும் எடுத்தெறிந்து பேச மாட்டீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனைகளையும் செவி கொடுத்து கேட்பீர்கள். இந்த நாள் மன அமைதி நிறைந்த நாளாக இருக்கும் இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். மனதிற்குள் சிவ சிவ நாமத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அன்பு வெளிப்படும். காதல் வெளிப்படும். மனதிற்கு பிடித்த நபரோடு நேரத்தை செலவு செய்வீர்கள். மற்றபடி வியாபாரம் வேலை எல்லாம் கொஞ்சம் மந்தமாக தான் இருக்கும். கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட வராமல் தடுக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். தெளிவாக செயல்படுவீர்கள். தெளிவாக வாழ்க்கைக்கு தேவையான முடிவுகளை எடுப்பீர்கள். சிவன் வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் சரியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். வருமானம் பெருகும் நாள் இன்று.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆழ்ந்த சிந்தனை இருக்கும். நல்ல ஓய்வு கிடைக்கும். செய்த தவறுகளை எண்ணி நீங்களே வருத்தப்படுவீர்கள். பிரச்சனைகளுக்கு உண்டான சரியான தீர்வுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள்.
Tags:
Rasi Palan