வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வசித்துவரும் ஆசிரியரான அன்ரனி ஜோய் வயது 36 என்பவரை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவர்கள் தெரிவிப்பதுடன் அவரது தொலைபேசியும் இயங்குநிலையில் இல்லை எனக்கூறப்படுகின்றது.|
இதனையடுத்து அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர். எனினும் இன்றுவரை அவர் தொடர்பான எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
எனவே படத்தில் உள்ள நபரை யாராவது கண்டால் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது கீழேயுள்ள இலக்கங்களிற்கு அழைப்பினை ஏற்படுத்தியோ தகவலை தெரிவிக்குமாறு அவரது குடும்பத்தினர் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
0777444117
0772011106
0743072802
