மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நினைத்த வேலைகள் எல்லாம் நினைத்த நேரத்தில் நல்லபடியாக நடந்து முடியும். வீட்டில் இதுநாள் வரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் கை கூடிவரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உணடு. பிள்ளைகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்து வந்த விஷயங்கள் எல்லாம், இனி வரும் நாட்களில் சரியாகிவிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருப்தியாக இந்த நாளை நகர்த்திச் செல்வீர்கள். பல நாள் தொல்லைகளிலிருந்து விடுபடுபீர்கள். எதிரி பிரச்சனை நீங்கும். எதிரியாகவே இருந்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவார்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வேலையும் வியாபாரமும் நிம்மதியாக எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்லும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவை நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும். ஜாக்கிரதை, வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக இருக்கும். இந்த நாள் பெருசாக டென்ஷன் இல்லை. இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தவிர மத்ததெல்லாம் சரியாகத்தான் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கப்போகிறது. புதிய நண்பர்களின் அறிமுகம், நல்ல அனுபவத்தை கொடுக்கும். மனதிற்கு இதமான சூழலை உண்டாக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். இன்று மாலை நேரத்தில் கொஞ்சம் உடல் சோர்வு வர வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் போதும். வேலையும் வியாபாரமும் நல்லபடியாக நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனநிம்மதி தரும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிரி தொல்லை நீங்கும். நிதிநிலைமை சீராகும். வாங்கிய கடனை திருப்பி கொடுத்துவிடுவீர்கள். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கும் நல்ல நேரம் வந்துவிட்டது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நிதானம் தேவை. எதிலும் அவசரப்படக்கூடாது. சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு சாதகமாக எதுவும் பேச மாட்டார்கள். தேவையற்ற எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கொஞ்சம் ஜாக்கிரதை.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று கூடுமானவரை அலைச்சலை குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஒரு வேலையை கையில் எடுத்தால் அது சட்டெஎன்று முடியாது. இழுபறியாகவே இருக்கும். புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். முன்கோபம் வேண்டாம். அவசர முடிவு வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக்கொள்வீர்கள். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வரும். மாணவர்கள் கலைஞர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் இருந்து வந்த தடைகள் எல்லாம் படி கற்களாக மாறும். நல்லது நடக்கும் நாள் இன்று.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன கஷ்டங்கள் வரப்போகும். அதுக்காக பயந்து விடக்கூடாது. துயரங்களை எதிர்கொள்ளக்கூடிய பக்குவம் உங்களுக்கு தேவை. பிரச்சனைகளை நிதானமாக கையாளுங்கள். அவசரப்படாதீர்கள். உணர்ச்சி வசப்படாதீர்கள். முன்பின் தெரியாத நபர்களை நம்பாதீர்கள். நம்பிக்கையானவர்கள் பேச்சை கேட்டு இந்த நாளை கடந்து செல்லுங்கள். அனுபவசாலிகளின் அறிவு உங்களுக்கு தேவைப்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சின்ன சின்ன குழப்பங்கள் இருக்கும். பழைய விஷயங்களை எண்ணி யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். உங்களுக்கான வேலை சுறுசுறுப்பாக ஓடாது. சிந்தனையை மாற்றுங்கள். ஒரே சிந்தனையை ஒருநிலைப்படுத்தி வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்தினால் மட்டும்தான் இந்த நாள் இனிய நாளாக அமையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். உடன் வேலை செய்பவர்களோடு சின்ன சின்ன வாக்குவாதம் வந்து போகும். பெருசாக பிரச்சனை இல்லை. நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். செலவுக்கு ஏற்ப கையில் பணம் இருக்காது. அதிக வட்டிக்கு மட்டும் கடன் வாங்கி சிக்கிக் கொள்ளாதீர்கள்.
Tags:
Rasi Palan