இன்றைய ராசிபலன் - 19.02.2026..!!!




மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்ல, நீங்கள் விரும்பிய வேலையை செய்ய, கடவுள் உங்களுக்கு நல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பார், பயன்படுத்திக் கொள்ளுங்கள். மற்றபடி பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இன்று கவனமாக இருக்க வேண்டும். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்கக் கூடாது. செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று துணிச்சலோடு செயல்படுவீர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நேர்மையோடு இருப்பீர்கள். எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். பேச்சாற்றல் வெளிப்படும் நாள். தோற்றமும் அழகாக இருக்கும். வசீகரத்தன்மையோடு செயல்படுவீர்கள். யாராலும் நடத்தி முடிக்க முடியாத காரியத்தை நீங்கள் செய்து காட்டுவீர்கள்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வம் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள்‌. வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமாக இந்த நாள் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். இறை நம்பிக்கை அதிகரிக்கும் நாள் இன்று.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கவலைப்படக்கூடாது. மன தைரியத்தோடு செயல்பட வேண்டும். ஒரு வாய்ப்பு கைநழுவி சென்றால், நிச்சயம் இன்னொரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் அதை மனதில் வைத்து செயல்படுங்கள். குட்ட குட்ட குனிந்து கொண்டே செல்லக்கூடாது. அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏதாவது ஒரு வகையில் பணம் உங்கள் கையை வந்து சேரும். மனதிருப்தி கிடைக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலவும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்க இருக்கு. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நல்லது நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வேலையில் பின்னடைவு உண்டாகும். இன்றைக்கான வேலையை நாளை பார்க்கலாம் என்ற எண்ணம் வரும். கவனமாக செயல்படுங்கள். கூடுமானவரை சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. இறைவழிபாடு செய்யுங்கள். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.



துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று குழப்ப மனநிலையில் இருப்பீர்கள். எந்த முடிவை எடுப்பது, எந்த முடிவை எடுக்க கூடாது என்ற தடுமாற்றம் வரும். கூடுமானவரை முக்கியமான முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தினால் போதும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

விருச்சிக


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று முன்கோபத்தை குறைக்க வேண்டும். பேசுவதை குறைக்க வேண்டும். வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். வாக்குவாதம் வேண்டாம். எதிரிகளிடம் இருந்து கொஞ்சம் விலகி இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் அனுசரணை தேவை. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கம்மியா பேசினாலே இன்னைக்கு வரும் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புது வேலைக்கு அப்ளிகேஷன் போடலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழுங்கள். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் துவங்க பேச்சு வார்த்தைகள் நடக்கும். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும். இந்த நாள் இனிய நாளாக அமையும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று அமைதியாக நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அடுத்தவர்கள் பிரச்சனையில் மூக்கை நுழைக்க மாட்டீர்கள். இதனாலேயே சில சமயம் உங்களுக்கு கெட்ட பெயர் வரும். ஆனால் நிம்மதி கெட்டுப் போகாது. நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கவனம் இருக்கட்டும். வண்டி வாகனம் ஓட்டும் போது ஃபோன் பேசாதீங்க. காய்கறி நறுக்கும் போது கூட இன்று கவனமாக இருந்து கொள்ள வேண்டும். சின்ன சின்ன காயம் வர சின்ன வாய்ப்பு இருக்கு.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அதிகமாக உழைப்பை முதலீடாக போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தேவையான இடத்தில் தேவையான ஓய்வை எடுத்துக் கொள்வது நல்லது.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று எதிர்ப்பாராத நன்மைகள் நடக்கும் நாள். எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள் பிரச்சனை உங்களை விட்டு விலகும். மன நிம்மதி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுத்து சந்தோஷத்தை அடைவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமையால் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
Previous Post Next Post


Put your ad code here