இன்றைய ராசிபலன் - 23.02.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும்‌. நல்ல விஷயங்கள் கைக்கூடி வரும். நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை சரியான நேரத்தில் புரிந்து கொள்வீர்கள். எதிரிகளிடமிருந்து விலகி இருப்பீர்கள். ஆதாயம் இல்லாமல் ஒரு வேலையை கையில் எடுக்க மாட்டீர்கள். நிதிநிலைமை சீராகும் நாள். பண பிரச்சனை தீரும் நாள். மன நிம்மதி கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் அலைச்சல் அதிகமாக இருக்கும். கையில் எடுத்த வேலைகளை சரியாக செய்து முடிக்க முடியாத சூழ்நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். சோம்பேறித்தனம் வேண்டாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம். குறிக்கோளிலிருந்து பின்வாங்காமல், சிரமப்பட்டாவது உங்கள் கடமைகளை முடித்து விடுங்கள்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு அதிகமாக இருக்கும். வேலை இரட்டிப்பாகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. டென்ஷனான வேலையை இன்று கையில் எடுக்க வேண்டாம்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இந்த நாள் குழப்பத்திலேயே துவங்க வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கவனமாக செயல்பட வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன அமைதி கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இந்த நாளை துவங்குவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் புது அனுபவத்தை கொடுக்கும்‌. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படும் நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு அமைதியை தரும்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அளவில்லா மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். இந்த பிரச்சனைகளை எல்லாம் எப்படி சமாளிக்க போகின்றோமோ என்று தவித்து வந்தவர்களுக்கு, ஒரு விடிவுகாலம் பிறக்கும். நிதிநிலைமை சீராகும். தேவையான அளவு பையில் பணம் இருக்கும். இறையருளால் இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் இருந்து வந்த கஷ்டங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. சுப செலவுகள் ஏற்படும். பெண் பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டு.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். பயணங்களின் போது மட்டும் கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். காதல் வெளிப்படும். திருமணம் வரை செல்லும். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களே, இன்று இறக்கப்பட்டு நீங்கள் செய்யும் நல்ல காரியங்கள், உங்களுக்கே எதிராக திரும்ப வாய்ப்புகள் உள்ளது. அடுத்தவர்களை பாவம் பார்ப்பது தவறு இல்லை. ஆனால் நம்பி ஏமாற கூடாது அல்லவா. கவனமாக செயல்பட வேண்டும் நீங்கள் மெய் என்று நினைப்பது பொய்யாக இருக்கலாம். பொய் என்று நினைப்பது, மெய்யாக இருக்கலாம். இந்த நாள் ஒரு குழப்பத்திலேயே செல்லும் கவனமாக செயல்பட வேண்டும். இறைவழிபாடு செய்வது மிகவும் அவசியம்.
Previous Post Next Post


Put your ad code here