இந்த ஆண்டின் மகா சிவராத்திரி பிப்ரவரி 15 ஆம் திகதி வருகிறது. அதுவும் இந்த மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பின் அரிதான கிரக சேர்க்கைகள் நிகழவுள்ளன. அதுவும் 8 யோகங்கள் ஒன்றாக மகா சிவராத்திரி நாளில் உருவாகவுள்ளது.
இப்போது 300 ஆண்டுகள் கழித்து மகா சிவராத்திரியில் உருவாகும் 8 அரிய யோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மகா சிவராத்திரியில் நல்ல நிதி வளர்ச்சியை பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். முக்கியமாக மிகப்பெரிய சாதனையைப் புரிவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மகா சிவராத்திரியில் உருவாகும் அரிய யோகங்களால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் நீண்ட கால பலனைத் தரும்.
விருச்சிகம்
மகா சிவராத்திரியில் உருவாகும் அரிய யோகங்களால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் சிவனின் பரிபூர்ண அருளால் நேர்மறையான பலன்கள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரியில் உருவாகும் சிறப்பான யோகங்களால் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல வளர்ச்சியுடன், லாபத்தையும் பெறுவார்கள்.
மகரம்
மகா சிவராத்திரியில் உருவாகும் அரிய யோகங்களால் மகர ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காண்பார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
கும்பம்
மகா சிவராத்திரியில் உருவாகும் சிறப்பான யோகங்களால் கும்ப ராசிக்காரர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
Tags:
Rasi Palan
