இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2.5% புதிய வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அரோஷ ரோட்ரிகோ இது தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பானது 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
இதற்கான வரி அறவீட்டு நடவடிக்கைகள் சுங்கத் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும்.
100 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள ஒரு வாகனத்தின் விலை, இந்த 2.5% வரி காரணமாக சுமார் இரண்டரை இலட்சம் ரூபாயினால் அதிகரிக்கும்.
இதனால் வாகன விலைகளில் கணிசமான உயர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சுங்கத்தில் விடுவிப்புச் செயற்பாடுகளில் (சுத்திகரிப்பு செயல்முறை) உள்ள வாகனங்களுக்கு இந்தப் புதிய வரி பொருந்தாது.
'டிட்வா' புயல் பாதிப்புகளுக்குப் பின்னர், தற்போது பொதுமக்கள் மத்தியில் வாகனங்களைக் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காணப்படுவதாகவும் அரோஷ ரோட்ரிகோ இந்தச் சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.
Tags:
sri lanka news