பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்பாக இன்று (13) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கார் ஒன்றில் இருந்த தம்பதியினரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொரு காரில் வந்த ஆயுதமேந்திய குழுவினர் இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tags:
sri lanka news
