6ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம் நீக்கப்பட்டதா? பிரதமர் நேரடி விளக்கம்..!!!


இலங்கையின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ், ஆறாம் வகுப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பாடநெறித் தொகுதிகள் (Modules) எதுவும் மீளப் பெறப்படவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (03) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் ஆறாம் வகுப்புக்கான கல்வி சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஆறாம் வகுப்பின் முதலாம் தவணைக்கான பாடநெறித் தொகுதிகள் மட்டுமே இதுவரை அச்சிடப்பட்டுள்ளன.

அவற்றில் எவையும் நிராகரிக்கப்படவோ அல்லது நீக்கப்படவோ இல்லை.

இந்த பாடநெறித் தொகுதிகள் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும்போது பயன்படுத்தப்படும்.

அவற்றை அகற்றுவதற்கோ அல்லது நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதற்கோ தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அச்சிடப்பட்டு களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த ஆறாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்த விநியோக நடவடிக்கைகள் பெப்ரவரி நடுப்பகுதிக்குள் நிறைவடையும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

புதிய பாடத்திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராததால், ஆசிரியர்கள் தற்போதுள்ள பாடத்திட்டத்தின் கீழ் வகுப்பறை கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here