சனிபகவான் ஒருமுறை தனது இயக்கத்தை முடிப்பதற்கு 30 ஆண்டுகள் ஆகும், இந்த 30 ஆண்டுகளில் சனிபகவான் 27 நட்சத்திரங்களிலும் பயணிக்கிறார். சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்ல நட்சத்திர மாற்றமும் மிகவும் முக்கியமானதாகும். இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை உருவாக்கும்.
சனிபகவானின் நட்சத்திர மாற்றம் மே 17 அன்று நிகழ்கிறது. இந்த நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் வாழ்க்கையிலும் ஸ்திரத்தன்மையும், பொருளாதார நன்மையையும் அடைப்போகிறார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படப்போகிறது. அவர்களின் பேச்சில் மென்மை நிறைந்திருக்கும், தொழில் வாழ்க்கையில் அவர்கள் எதிர்பார்க்காத புகழைப் பெறலாம். வேலையைப் பொறுத்தவரை, பதவி உயர்வுகள் மற்றும் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடகம்
சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்கள் மிகப்பெரிய நன்மைகளைப் பெறலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை இந்தக் காலகட்டத்தில் முடிக்க முடியும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நட்சத்திர மாற்றம் நேர்மறையான மாற்றங்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் கடின உழைப்புக்கான பலன்களை முழுமையாக அடையலாம். இந்த காலகட்டத்தில் சரியான வாய்ப்புகளைப் பெறுவதன் மூலம் அவர்கள் பெரும் செல்வத்தைக் குவிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த யோகம் இந்த ராசிக்காரர்களின் லாபம் மற்றும் வருமான வீட்டில் உருவாகிறது. வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும், மேலும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அடையப்போகிறார்கள். இது அவர்களுக்கு பெரும் வெற்றியைத் தரப்போகிறது, அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் அவர்களுக்கு துணையாக இருக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும், மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணியிடத்தில் அவர்களின் முயற்சிகள் திருப்திகரமான பலன்களை அளிக்கும், மேலும் திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க முடியும்.
Tags:
Rasi Palan
