பொலிஸாரை கைது செய் : சிறுவனின் சடலத்துடன் உறவுகள் போராட்டம்..!!!


யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து ‘பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது’ என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடல் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here