போக்குவரத்தில் வெற்றிலைமென்ற மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!!!



புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பயணித்த வாகனங்களை வழி மறித்து பரிசோதனை மேற்கொண்ட சமயம் வெற்றிலை மென்று கொண்டிருந்த மூன்று நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை, பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஆகியோருடன் இணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன் தலைமையில் பொது இடங்கள், பொது போக்குவரத்தில் வெற்றிலை மென்று துப்புபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் திடீர் சோதனை நடவடிக்கையினை ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பயணித்த பேருந்து , கார் , முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்களை வழி மறித்து பரிசோதனை மேற்கொண்ட நிலையில் வெற்றிலை மென்ற மூன்று நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here