பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு..!!!



நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகின்றது.

அந்த வகையில் நாளை (14) முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மார்ச் 3 ஆம் திகதி தொடங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இம்முறை 382,249 பாடசாலை பரீட்சார்த்திகளும் 69,214 தனியார் பரீட்சார்த்திகளும் என 451,463 பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 3,545 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here