வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். அப்படி கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது அதன் தாக்கம் மனித வாழ்க்கையும், பூமியிலும் காணப்படும். சில சமயங்களில் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பல யோகங்களை உருவாக்கி, இன்னும் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் மார்ச் 18 ஆம் தேதி குரு பகவானின் மீன ராசியில் ஒரு சிறப்பான கிரக சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் இந்த ராசியில் 4 கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன. அதில் சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த நான்கு கிரகங்களின் சேர்க்கையால் மீன ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் தொழில், வணிகம், நிதி போன்றவற்றில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். இப்போது மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமையும், கவர்ச்சியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
நீண்ட காலமாக வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கு முயற்சித்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முக்கியமாக கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய தொழிலை தொடங்க முயற்சித்தால், நல்ல பலன் கிடைக்கும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள் மற்றும் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட காலமாக சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
தொழில் ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். எதிர்பாராத பண உதவிகள் கிடைக்கும். புதிய வருமானத்தால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
Tags:
Rasi Palan
