
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். மன நிறைவான நாளாக இருக்கும். லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த நாளில் நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் நல்ல முன்னேற்றத்தை தரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். கடன் சுமையிலிருந்து விடுபட்டு பெருமூச்சு விடுவீர்கள். நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் துணிச்சலோடு இருப்பீர்கள். சாதனை படைக்கக்கூடிய நாள் இன்று. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். சுப செலவுகள் ஏற்படும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். உங்களுடைய நிதி நிலைமை மேலோங்கும். பண பற்றாக்குறை தீரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வேலையில் பிரமோஷனுக்கு முயற்சி செய்யலாம். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகளை அறவே தவிர்ப்பது நல்லது. நீண்ட தூர பயணங்களில் முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக செயல்படுங்கள். வேலையிலும் வியாபாரத்தையும் அலட்சியம் வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆன்மீக ரீதியான விஷயங்கள் மனதிற்கு அமைதியை தரும். தேவையில்லாத சிந்தனையை தூக்கி எறிந்து விடுங்கள். சந்தேகப்பார்வை வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிடவே கூடாது. முன்கோபத்தை முழுமையாக குறைத்துக் கொள்வது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை பளுவும் அதிகமாக இருக்கும். சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். கொஞ்சம் சிரமங்களை இந்த நாள் கொடுக்கத்தான் செய்யும். இருந்தாலும் மனம் உடைந்து போகாமல் அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று சாதனை படைக்க கூடிய நாளாக இருக்கும். எதிர்பாராத நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும். பெயர் புகழ் அந்தஸ்து உயரவும் வாய்ப்புகள் உள்ளது. கலை துறையினர், மாணவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் நாள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கு. அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்க முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுடைய புகழை நாலு பேர் வாயால் கேட்கக்கூடிய பாக்கியமும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்ந்தால் உங்களைப் போல வாழ வேண்டும் என்று சொல்லுவார்கள். இன்று நீங்கள் பாக்கியசாலிகளாக வலம் வருவீர்கள். மனதில் இருந்த பாரம் குறையும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் குறையும். நேரம் வீணாக வாய்ப்பு உள்ளது. கவனமாக இருங்கள். முக்கியமான வேலைகள் இருந்தால் உங்களுடைய கவனக்குறைவால் பிரச்சனைகள் வந்து விடக்கூடாது. பிள்ளைகள் கல்வியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். தேவையில்லாத நட்பில் இருந்து விலகி இருப்பது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியம் தேவை. எந்த பிரச்சனைகளை கண்டு பயந்து உட்காரக் கூடாது. எதிர்த்து போராடக்கூடிய மனப்பக்குவத்தை வெளிப்படுத்துங்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுங்கள். கோழையாக இருந்தால் இன்று நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். தைரியம் வெளிப்பட்டால் பெரிய பெரிய பிரச்சனையை கூட கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போகும் பார்த்துக்கோங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சிக்கலான பிரச்சனைகளை கூட சுலபமாக தீர்த்து வைப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு பாராட்டு கிடைக்கும் நாள் இன்று. நிதி நிலைமை சீராக இருக்கும். மன அமைதி கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை பளு அதிகமாக இருக்கும். உடல் சோர்வு அதிகமாக இருக்கும். வேலையையும் ஆரோக்கியத்தையும் எப்படி கவனிப்பது என்ற தடுமாற்றமும் வரும். பேசுவதை குறைத்து கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அவசரம் வேண்டாம் நிதானமாக இருந்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.
Tags:
Rasi Palan