
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தேவை இல்லாத பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த கசப்பான விஷயங்கள் மறையும். நிம்மதியாக உங்களுடைய கடமைகளை செய்து முடிப்பீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். தெளிவாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உங்களுக்கான நன்மைகள் உங்களைத் தேடி வர போகும் நாள். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்புகளை கைநழுவ விட்டால் நீங்கள் தான் பொறுப்பு.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை குறையும். சேமிப்பு உயரும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இந்த நாள் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களை பொருத்தவரை இன்று பட்ட கஷ்டத்திற்கு நல்லதொரு பலன் கிடைக்கும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சிரமம் பார்க்காமல் கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். மனதை தளர விடாமல் இருங்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் இன்று முன்னேற்றம் கிடைக்கும் நாளாக அமையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நட்பு வட்டாரத்தில் நல்லது நடக்கும். புதிய நண்பர்களின் வருகை நிறைய நல்ல அனுபவத்தை கொண்டு வந்து சேர்க்கும். மனக்கவலை நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நஷ்டமும் லாபமாக மாறும் நாள் இன்று. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உடல் சோர்வு இருக்கும். அசதியால் சில வேலைகள் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். எந்த வேலையிலும் அவசரம் வேண்டாம்.
- Advertisement -
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். தாமதத்தால் சில பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத மன சங்கடங்கள் வரலாம். அதிகமாக பேசாதீர்கள். கடமையில் மட்டும் கண்ணும் கருத்தோடு நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவி வாக்குவாதம் செய்யவே கூடாது. குடும்பத்தில் நிம்மதி கெட்டுப் போயிடும் ஜாக்கிரதை.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களை பொருத்தவரை என்று உற்சாகமாக இருப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எந்த ஒரு வேலையையும் ஆதாயம் இல்லாமல் கையில் எடுக்க மாட்டீர்கள். அதிபுத்திசாலித்தனம் வெளிப்படும். பேச்சு திறமையால் எல்லா விஷயத்தையும் சாதித்துக் கொள்வீர்கள். யாராலும் இன்று பேசி போட்டி போட்டு உங்களை ஜெயிக்கவே முடியாது. இது உங்களுக்கான நாள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சுற்றி இருப்பவர்களின் மூலம் ஆதரவு கிடைக்காது. நல்லது செய்தாலும், குறை சொல்ல ஆயிரம் பேர் வருவார்கள். அதை பற்றி கவலைப்படாமல் உங்கள் மனதிற்கு பட்டதை செய்யுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். மன அமைதி நல்ல வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நிறைய நன்மைகள் நடக்கும். புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். ஒரு புது முடிவு எடுக்கும் போது குடும்ப உறவுகளோடு கலந்து பேசி, ஒரு முடிவு எடுப்பது சந்தோஷத்தை இரட்டிப்பாகும். இன்று குடும்ப நலனிலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். குடும்ப பிரச்சனைகள் சரியாகும். நீண்ட நாட்களாக செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலைகளை கையில் எடுங்கள். சுறுசுறுப்பாக முடியும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். சொத்து சேர்க்கை உண்டு.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். குடும்ப சண்டைகள் ஒரு முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கூடுமானவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, வீட்டு சாப்பாடு சாப்பிடுவதை பழகிக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.
Tags:
Rasi Palan