இன்றைய ராசிபலன் - 13.03.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதி அதிகமாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை அலசி ஆராய்ந்து தீர்க்கமாக ஒரு முடிவை எடுப்பீர்கள். கோழைத்தனத்திலிருந்து விடுபடுவீர்கள். பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். பேச்சில் தெளிவு பிறக்கும். மன உறுதியால் இன்று வெற்றி வாகை சூட போகிறீர்கள். தலைநிமிர்ந்து நிற்க போகிறீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவன குறைவு இருக்கக் கூடாது. தேவையில்லாத சின்ன சின்ன மறதியால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எந்த வேலையாக இருந்தாலும் கவனத்தோடு செயல்படுங்கள். குறிப்பாக மாணவர்கள் கல்வியில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். தேவையில்லாத நட்பில் இருந்து விலகி இருப்பது நல்லது.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன எதிர்ப்புகள் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கவனமாக இருக்கவும். நிறைய தண்ணீர் குடியுங்கள். கூடுமானவரை அதிகமான வெயில் நேரத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். எல்லா வேலைகளும் சரியான நேரத்தில் நடந்து முடியும். உடல் சோர்வு விலகும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனநிறைவும் ஆரோக்கியமும் ஒரு சேர கிடைக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு. பயணங்கள் நல்லபடியாக அமையும்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடை கற்கள், படி கற்களாக மாறும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். அடமானத்தில் வைத்த சொத்து நகைகளை மீட்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. எல்லா வேலையையும் முடிந்தது போல இருக்கும். ஆனால் கடைசி நிமிஷத்தில் ஒரு பிரச்சனை தலை தூக்கும். பிரச்சனைகளை கடந்து வரும் போது தான் சாதனை படைக்க முடியும். சோர்வடையக்கூடாது, மனமுடைந்து போகக்கூடாது, விடாமுயற்சி இன்று உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை தரும்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று ஆசைகள் அதிகமாக இருக்கும். செலவுகளும் அதிகமாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவை சந்திக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். ஆசை இருந்தால் தவறு கிடையாது. எந்த விஷயத்திலும் பேராசை படாதீங்க. குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதிங்க. நேர்மையாக இருப்பது நல்லது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். புது நண்பர்களின் அறிமுகம் மனதிற்கு அமைதியை தரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். நீண்ட தூர பயணங்கள் சந்தோஷமாக இருக்கும். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்ற பாதையில் பயணம் செய்வீர்கள். வேலையில்லாமல் தவித்து வந்தவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு அமையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வ கோளாறு அதிகமாக இருக்கும். வேலை செய்வதை காட்டிலும் அடுத்தவர்களைப் பற்றி விமர்சனம் பேசுவதில் இன்று அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களுடைய ரகசியங்களை நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆர்வக்கோளாறால் வரக்கூடிய பிரச்சனைகளையும் நீங்கள் தான் எதிர்கொள்ள வேண்டும். பேச்சை குறைக்க வேண்டும். நிதானம் தேவை ஜாக்கிரதை.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரையில் சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். வருமானம் சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் தடைப்பட்டுக் கொண்டிருந்த பணம் உங்கள் கையை வந்து சேரும். உங்களுடைய கடன் சுமை குறையும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் நல்ல ஆரோக்கியம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு, எதிர்பாராத பரிசு, எதிர்பாராத அதிர்ஷ்ட காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. நிறைய நன்மைகள் நடக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்ப சண்டைகள் சரியாகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
Previous Post Next Post


Put your ad code here