இன்றைய ராசிபலன் - 14.03.2026..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு பாசம் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். இதுநாள் வரை நீங்கள் இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெறுவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேளையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இறைவழிபாடு இன்று மனதிற்கு அமைதியை தரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தீராத நோய்நொடி பிரச்சனை, தீராத கடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்புகள் வரும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமை அவசியம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. முன் கோபம் கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக செயல்படுங்கள். பெரியவர்களது பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மனதளவில் கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இறைவழிபாடு செய்யுங்கள். இன்று அடுத்தவர்களை பார்த்து, நீங்கள் கட்டாயம் பொறாமை படக்கூடாது. உங்களுக்கானது என்னவோ அதை கடவுள் நிச்சயம் உங்களுக்கு கொடுத்து விடுவான். மனதை ஒருநிலை படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. வேலையில் ஆர்வம் காட்டுங்கள்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் தேவை. தேவையற்ற பொருட்களை வாங்காமல் தவிப்பது நல்லது. ஆடம்பரமாக வாழ்வதற்கு ஆசைப்பட வேண்டாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். நண்பர்களாக இருந்தாலும் உறவுகளாக இருந்தாலும் இன்று யாரையும் நம்பி பணத்தையோ அல்லது விலை உயர்ந்த நகையையோ கொடுக்காதீங்க. சில பொருட்கள் திருடு போவதற்கும் தொலைந்து போவதற்கும் கூட வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் சீராக எப்போதும் போல நடக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். சுப செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். புது முடிவுகளை எடுக்கும்போது சின்ன தடுமாற்றம் இருக்கும். அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். அடம் பிடித்து எந்த வேலையும் செய்யக்கூடாது. குறிப்பாக இளைஞர்கள் மாணவர்கள் இன்று கவனமாக இருப்பது நல்லது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். பிரச்சினைகளிலிருந்து விடுபடக் கூடிய நாள். வேலையில் வியாபாரத்தில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்வீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உடன் இருப்பவர்களால் மன நிம்மதி கிடைக்கும். புது உறவுகளின் வருகை சந்தோஷத்தை கொடுக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்க்காத நல்லது உங்களைத் தேடி வரும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்வு தான். வேலையிலும் வியாபாரத்திலும் அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கையை வந்து சேரும். பண பிரச்சினை தீரும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. கணவன் மனைவி ஒற்றுமையால் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். காலை முதல் கொண்டே உங்களுடைய வேலை சுறுசுறுப்பாக துவங்கிவிடும். சோர்வுக்கு இடம் இருக்காது. சோம்பேறித்தனத்திற்கு இடம் இருக்காது. இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் நிறைய நல்லது நடக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
Previous Post Next Post


Put your ad code here