தெல்லிப்பழையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வியாபர நிலைய உரிமையாளர்களுக்கு இழப்பீடு..!!!


டித்வா புயலின் போது, தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதிப்படைந்த வியாபார நிலையங்களுக்கு தலா 2 இலட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கி வைக்கப்பட்டது

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பாவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது

நிகழ்வில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் தெல்லிப்பழை பிரதேச சபை உறுப்பினர் மிதுசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட வியாபர நிலைய உரிமையாளர்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்துள்ளனர்.




Previous Post Next Post


Put your ad code here