மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் அவசரம் வேண்டாம். புது முடிவுகளை எடுப்பதாக இருந்தால் நாளை தள்ளிப் போடுவது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். தீராத பண கஷ்டம் தீரும். கடன் சுமை குறையும். உயர் அதிகாரிகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும். நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வருமானம் பெருகும். மன நிறைவான நாள் இன்று.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்று கூட பார்க்க மாட்டீர்கள். உங்களுடைய கடமைகளை சரியாக நிறைவேற்றி விடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். விருந்தாளிகளின் வருகை சுப செலவுகளை ஏற்படுத்தும். பிள்ளைகளால் மன நிறைவு உண்டு. இன்று நாள், நேரம் போவதே தெரியாது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் மந்தமான தன்மை உண்டாகும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்ன சின்ன மறதியால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பயணங்களில் பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் இருக்கட்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவீர்கள். பல நாள் பஞ்சாயத்திற்கு இன்று ஒரு முடிவு கிடைக்கும். நண்பர்கள் உறவுகளிடம் இருந்த பகை விளக்கும். சொத்து பிரச்சனைகள் சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்வு இருக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் ரிலாக்ஸ் ஆன நாளாக இருக்கும். இன்று மாலை வெளியிடங்களுக்கு செல்வீர்கள். சுப செலவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவன குறைவு வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன எதிர்ப்புகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. புது முடிவுகளை எடுக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். பெரியவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு இன்று பொறுமை வேண்டும். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் அதிகரிக்கும் நாள். செலவுகள் அதிகரிக்கும் நாள். தேவையில்லாத பிரச்சனைகளும் அதிகரிக்க கூடிய நாள். அளவான ஆசைகள் வெளிப்பட்டால் பிரச்சனை இல்லை. பேராசை பெரும் நஷ்டம் ஆகிவிடும். கவனமாக செயல்படுங்கள். செலவுகளை குறைப்பது நல்லது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாமல் இருப்பதும் நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விளக்கும். நீண்ட நாள் கடன் சுமை தீரும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஆரோக்கியம் என்று இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. உறவுகள் மூலம் வந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். மன நிம்மதி கிடைக்கும் நாள் இன்று.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு செய்யலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்களுடைய வேலையில் கொஞ்சம் கவனமாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சொந்த நாடு திரும்புவதற்கும் வாய்ப்புகள் வரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அந்தஸ்து மரியாதை உயரக்கூடிய நாளாக இருக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் விலகும். நிதிநிலைமை சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். முன்கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டால் மேலும் நன்மைகளை பெறலாம்.
Tags:
Rasi Palan